Monday, September 1, 2008

இரண்டம் முகம்


தூக்கம் தொலைந்த
இரவொன்றில்
தலையணைக்குள் புரண்டு புரண்டு
அடம்பிடிக்கிறது கனவு
இருளின் கர்ப்பத்தில்
பிரசவம்பார்த்தவள்
போதாதென்று துப்பிவிட்டுப்போன
வெளிச்சம்
கசிந்து பரவுகிறது அறைக்குள்ளும்...
மனசுக்குள்
இனம்புரியாத அமழி
நிரவ
காதுகளில் அறைந்துகொண்டிருந்த
நிசப்தத்தை பிடுங்கிச் செல்கிறது
செல்போனில் கூவும் சேவல்

வழக்கம்போல
தூங்காத எனது
இரவை சுருட்டிக்கொண்டு
விடியாத நாள் ஒன்றுக்குள்
பயணிக்கத் தொடங்குகிறேன்...
நேற்றய கனத்தின்
மிகுதியை இறக்காமலே
இன்றைக்கான
பொழுதின் தேவைகளையும்
சுமந்துகொண்டு...

5 comments:

Mathu said...

Very nice!

சகாராவின் புன்னகை said...

Thank you very much to come again,
it's pleasure to see you here,And i am seeking appreciation for our voice from the world. still i have confident which i can do it.

with regards

நுள்ளான் said...

கவிதையில் சொல்லவந்தவிடயம் இரண்டாம் பகுதியில் விளங்கினாலும் ஒரே தடவையில் விளங்க மறுக்கிறது. ஒன்றிற்கொன்று முரணான சொற்களை வைத்து கருவில் குழப்பத்துடன் தெளிவுபடுத்த முனைந்திருப்பதுமட்டும் தெளிவு.

உதாரணந்திற்கு அறைந்துகொண்டிருக்கும் என்ற சொல்லிற்கும் நிசப்தத்திற்கும் என்ன தொடர்பு? இரண்டுமே ஒன்றிற்கொன்று முரணான விடயங்களை சொல்லிநிற்கும் சொற்கள்.

திறமையிருப்பது கண்கூடு. ஆனால் அதையே இன்னும் மிகைப்படுத்த முனைந்து இருப்பதையும் கெடுத்தாற்போல் உள்ளது.

இது எனது தனிப்பட்ட என்னறிவிற்கு எட்டியவரையிலான பின்னூட்டமே.

காயப்படுத்தின் மன்னிக்க.

சகாராவின் புன்னகை said...

வாருங்கள் நுள்ளான்! (உங்கள் பெயர் குறிப்பிடாததினால் இப்படியே அளைக்கிறேன்)

//காயப்படுத்தின் மன்னிக்க.//
நான் கயப்பட்டதாக உணரவில்லை நண்பரே என்னை சரிபார்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே உணர்கின்றேன்.

//அறைந்துகொண்டிருக்கும் என்ற சொல்லிற்கும் நிசப்தத்திற்கும் என்ன தொடர்பு?//
நாங்கள் வகுத்து வைத்த இலக்கண இலக்கிய இன்னும் சமுகச் சம்பிரதாய வரைமுறைகளுக்குள் நின்று பளகியவர்கள். அதனால்தான் எமது இயல்பிற்கு பொருத்தமான தேவைகளை புறாந்தள்ளும் முரண்பாடுகளை சகிக்கமுடியாமல் சகித்துக்கொண்டு வாழ்கின்றோம். அதனாலேயே எமக்குள் முரணான இரண்டு முகங்கள் தோற்றம்பெற்றுவிடுகின்றன. இந்தக் கவிதைக்கும் உங்கள் முரண்பாட்டிற்கும் அதுவே காரணமாக இருக்கமுடியும்.

"மனசுக்குள்
இனம்புரியாத அமழி
நிரவ
காதுகளில் அறைந்துகொண்டிருந்த
நிசப்தத்தை பிடுங்கிச் செல்கிறது
செல்போனில் கூவும் சேவல்" உங்கள் கேள்விக்கு இந்த வரிகளிலேயே விளக்கமிருக்கிறது, சுருங்கக் கூறின் அமைதியாய் இருக்கிறவனுக்குள் சப்தங்கள் ஒலிக்கிறது அமழியாய். அதனாலேயே இலக்கண முரண்பாட்டை புறந்த்தள்ள நேர்ந்தது.

சந்தித்ததில் மகிழ்ச்சி
ப.அருள்நேசன்

நுள்ளான் said...

கவிதையில் நீங்கள் சொல்லவந்தவிடயம் விளங்கிக்கொண்டது. ஆனால் சொற்களின்கருத்திற்குள் முரண்பாடாக இருக்கின்றது என்றே சொல்கின்றேன்.


அறைந்துகொண்டிருக்கிறது என்றால் அதற்கு பொதுவான கருத்தாக ‘ தொடர்ச்சியாக ஏதோ ஒருவகையில் ஏதோ ஓர் புலனை ஆக்கிரமித்துக்கொண்டிருத்தல்” என்ற பொருள் கொள்ளலாம். நிசப்தம் என்றால் அமைதி. அங்கே எந்தப்புலனாலும் எந்தவிதமான அருட்டல்களும் உணரப்படப்போவதில்லை. இது இஃதிருக்க, தாங்கள் குறிப்பிட்ட இந்த இரண்டு சொற்களுமே கவிதையுல் குழப்பத்துடனான தெளிவை தந்திருக்கிறது.

பார்த்தீபனின் கிறுக்கல்கள் கவிதைத்தொகுப்பில் ஓர் கவிதை படித்ததாக ஞாபகம். அந்தக்கவிதையில் ஓரிடத்தில் ”பளிச் என்று இருட்டாக ” என ஓர் இடத்தில் பயன்படுத்தியிருப்பர். அதில் பளிச் என்ற சொல் ஏதோ ஒன்று கண்ணை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது என்ற கருவில் சொல்லப்பட்டிருப்பது தெளிவு. அதே போன்ற ஓர் முயற்சியில் இறங்கியிருக்கிறீகள் என்பதும் இந்தக்கவிதையில் கண்கூடு.

இவையெல்லாம் ஏதோ நமது சிற்றறிவிற்கு எட்டியவரை சில உளரல்களே. பிடித்திருந்தால் சந்தோஷம். பிடிக்காவிட்டால் கவலையில்லை.