Sunday, July 19, 2009

முகாமில் ஒருநாள்


அண்மையில் வவுனியா நலன்புரிநிலையத்திற்கு குடும்பத்தாரை பார்வையிடச் சென்றிருந்தேன், முட்கம்பிகளாலான ஆறடி உயர வேலியில் காத்துக்கிடந்தமக்களை பார்வையிட காண கூடடமாக மக்கள் இன்னொரு பக்கத்தில் நின்றார்கள். என்னை கவனமாக கூட்டிச்செல்லுமாறு மச்சாள் (என்வயதுதான்) ஒருவரிடம் அத்தான் ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி கிடைத்தது மடையுடைத்த வெள்ளம்போல் ஓடினோம், சோதனைகளுக்கு பிறகு 15பேராக 15நிமிடம் வரை பார்க்க அனுமதி. அங்கே அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் காத்திருந்தனர், மகன் வெய்யிலில் வருவான் என்பதற்காக அப்பா கொக்கொக்கோலா குளிர்பான போத்திலுடன் நின்றார், அம்மான் தானே சமைத்த எனக்கு விருப்பமான உணவுப்பொருட்களுடனும் ஒரு பையில் சில பொருகளுடனு நின்றார்கள். அப்பா வேலைக்கு லீவுபோட்டு வந்திருந்தார், தங்கைகள் பாடசாலை போகவில்லை. "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியே" பேசினோம். வார்த்தைகள் தீராமலே நேரம் தேய்ந்துபோனது. திருப்பி அனுப்பப்பட்டோம். மீண்டும் இராணுவகாவலர்களிடம் போய் பேசினேன், நான் கொழும்பில் இருந்து வருவதாகவும் உள்ளே செல்ல அனுமதிவேண்டும் என்றும்..... சிறிது நேர விவாதத்திற்கு பிறகு உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

உள்ளே சென்று எமக்கு கொடுக்கப்பட்ட கொட்டகைக்குள் சென்றோம். மகிழ்ச்சி முகங்களில் பிரகாசித்தது. அங்கே செல்வதற்கு பணம் என்னிடமிருக்கவில்லை, அப்போது கௌசி அண்ணா, ஒரு தொகை பணத்தை கொடுத்து போய் வீட்டாரை பார்த்துவா எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார். இந்த மனம் இப்போது எத்தனை பேருக்குவரும். அந்தப்பணத்தில் தங்கைகளுக்கும் அப்பா அம்மாவுக்கும் உடைகளும் இனிப்புப் பண்டங்களும் வாங்கிப்போயிருந்தேன். அவர்கள் என்னை பார்த்த சந்தோசத்திற்குமேல் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையானாலும், அண்ணா வாங்கிக்கொடுத்தது, மகன் வாங்கிக்கொடுத்தது என்று நண்பர்களிடம் காட்டினார்கள்.

நான் எல்லாவற்றையும் மறந்து ஒருநாள் சதோச்மாயிருந்தேன், அம்மா தேறிவிட்டார், தங்கைகள் தேறிவிட்டார்கள், சாப்பாட்டுக்கு குறையில்லை, அவர்கள் பேச்சில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருந்தது. என் அழகுத்தங்கையின் அழகுக் கூந்தலை தவிர, மீட்டு விட்டார்கள் தங்களை. நான் தூக்கி எறிந்த கடவுளை தேடிப்போய் சொன்னேன், இனியும் வேதனைகளை கொடுக்க நினைத்தால் அதை எனக்கே கொடு, இவர்களை விட்டுவிடு, சாவின் குகையிலிருந்து வந்த இவர்களிடம் இப்போது புதிதாக அரும்புகிற மகிழ்ச்சியை பிடுங்கிவிடாதே!

அங்கே எனக்காக நிறைய சாப்பாடுகள், பலாப்பளம். சோடா, கேக், சுவீட்ஸ்! அம்மா அவசர அவசரமாக சமைத்து மத்தியானம் சாப்பாடும்தந்தார்ர், எனக்கும் தங்கைகளுக்கும் தன் கையாலேயே சாப்பாடு தந்தார், அம்மாவுக்கு நாங்கள் மூன்றுபேரும் எப்போதும் இப்படியே பாசமாக ஒற்றுமையாக இருக்கவேண்டு என்றே விருப்பம், அதற்காகவே ஒரு கோப்பையில் சாப்பாடு போட்டு எம் மூவருக்கும் தருவார், அவர் அடிக்கடி சொல்வார் " எப்படி எம்முடையதெல்லாம் உங்களுடையதாகிறதோ அப்படியே உங்களுக்குள்ளும் எப்போதும் இருக்கவேண்டும் என்று" அதன் பொருள் இப்போதுதான் எனக்கு புரிகிறது, எனக்குளேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் "என்னுடையதெல்லாம் உங்களுடையதே" இந்த ஐந்துபோர் கொண்ட உலகம் எபோதும் இருக்கும் அம்மா.

இந்நாள் வரையிலான என்னது தமிழுக்கும் சிந்தனைக்கும் எப்படி அம்மா காரணமாக இருந்தாரோ அதேபோல என் அறிவுக்கும் ஆழுமைக்கும் பண்புக்கும் பளக்கத்துக்கும் அப்பா காரணமாக இருக்கிறார். அவர் இதுவரை எங்களை கைநீட்டி அடித்ததுகூடக்கிடையாது, குடிப்பளக்கமோ சந்திவளியே வெட்டிப்பேச்சு பேசும் பளக்கமோ ஏன் கடையில் தேனீர் அருந்தக்கூட போகமாட்டார். எங்களுக்ககவே தன் எல்லா உளைப்பையும் சிந்தனையையும் செலவளிப்பவர். எனக்கு இப்போதும் வெளியே போய் ஒரு அலுவல் பார்க்கத் தயக்கம், என் தங்கைக்கு தேநீர்கூட தயாரிக்கத்தெரியாது எல்லாவற்றையும் அவரே செய்துதருவார், இது இன்னொருவருக்கு பிளையாகப்படலாம் ஆனால் அவர் எங்கள்மேல் வைத்துள்ள பாசம், அக்கறை என்பதைத்தான் நாங்கள் உணர்கிறோம். அந்தப்பாசத்தினால்தான் புலிகளால் கொடூரமாகத்தாக்கப்பட்டு சுயனினைவை இழந்து இரத்தவெள்ளத்தில் கிடந்தார், தன் பிள்ளையை கொல்லக்கொடுக்க எப்படி ஒரு தந்தையால் சம்மதிக்கமுடியும் அதனாலேயே அடிபட்டார். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களுக்குமேல் எங்களை இருக்கவைத்து சாப்பாடுபோட இயலும் அவரால், அதற்காக அவர் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். முகாம் மக்களுக்கு தன் பணியை செய்ய ஆரம்பித்துவிட்டார் அப்பா என்று அம்மா சொன்னார். எங்களுக்கு மட்டுமல்லாமல் உதவிகேட்டு வருபவர்களுக்கு சலிக்காமல் உதவுவார். எங்களுக்கு எல்லாமே அப்பாதான், அவரின் அன்புக்கும் அக்கறைக்கும் பதில் என்ன செய்துவிடப்போகிறோம்?

மாலையானது நான் விடைபெற இருந்தேன், என்னை வாசல்வரை அளைத்துவந்தார்கள், அம்மா பிரியமுடியாமல் என்னை அணைத்து முத்தமிட்டா, கடைசி தங்கையும் வெட்கப்படுக்கொண்டே ம்ம்ம் கொஞ்சிளாள், அம்மா சொல்லிவைத்தார் போல. அப்ப எனக்கு கொஞ்சேல்ல? பெரியவள் ஓடிவந்து என் இரண்டு கன்னங்களிலும் ம்ம்ம். "பாசம் ஒரு வேதம் பேசடி கிளியெ

தூரத்தே நான் மறையும்வரை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த நினைவுகள் போதும் என்னை வாழ்வின் வலிகளில் இருந்து விடுவிக்க

6 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

விழி கசிய வாசித்தேன். நல்ல பதிவு.

கட்டுரையில் 'ழ'கரப்பிழை வருகிறது. அதனால் இக் கட்டுரையை வேறு ஊடகப் பார்வைகளுக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் வரலாம்.கவனியுங்கள்.

த.அகிலன் said...

எனக்கும் தெரிந்த உன் அம்மாவின் கைமணம்.. அப்பாவின். மறைமுகப்பிரியம்.. தங்கைகளின். அளவில்லாப்பிரியம். மறுபடியும் மீள்வதில். மகிழ்ச்சி நண்ப..

பதி said...

நெகிழ்ச்சியாக இருந்தது இப்பதிவை படிக்கையில்...

சகாராவின் புன்னகை said...

//கட்டுரையில் 'ழ'கரப்பிழை வருகிறது//
உண்மைதான் நண்பரே எம்.ரிஷான் ஷெரீப் , அவற்றை சரிசெய்துகொள்கிறேன்.

சகாராவின் புன்னகை said...

//எனக்கும் தெரிந்த உன் அம்மாவின் கைமணம்.. அப்பாவின். மறைமுகப்பிரியம்.. தங்கைகளின். அளவில்லாப்பிரியம். மறுபடியும் மீள்வதில். மகிழ்ச்சி நண்ப.//

நன் சொல்லவ்ந்த்தை நீ அழகாக நான்கே வரிகளில் சொல்லிவிட்டாய் நண்பா.

சகாராவின் புன்னகை said...

வாங்க நண்பரே பதி, உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி